வெளியுறவுக் கொள்கை தோல்வியால் சிலிண்டர் தட்டுப்பாடு என ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் காட்டம்

வெளியுறவுக் கொள்கை தோல்வியால் சிலிண்டர் தட்டுப்பாடு என ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் காட்டம்

மத்திய பாஜக அரசின் தவறான முடிவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவே நாட்டில் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தொலைநோக்கு பார்வை இல்லாத அரசின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இந்த நிலையை மாற்ற ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் பிரம்மாண்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மக்களின் தகிக்கும் கோபத்தை உணர்ந்து, எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை என முதல்வர் தனது எக்ஸ் தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *