வெற்றி இந்தியாவின் டிஎன்ஏ தோல்வி பாகிஸ்தானின் டிஎன்ஏ முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் விளாசல்
March 14, 2026

2026 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான பெரும் வித்தியாசத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அணியின் ரத்தத்தில் வெற்றி ஊறியுள்ளதாகவும், பாகிஸ்தான் அணி தோல்விகளில் தத்தளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் 10 ஆண்டுகால உழைப்பிற்கு கிடைத்த பலன் என்று அவர் குறிப்பிட்டார்.
டாஸ் தோற்றாலும் இமாலய ரன்களை குவிக்கும் இந்தியாவை யாராலும் நெருங்க முடியாது என்று லத்தீப் கூறினார். மேலும், பாகிஸ்தான் வாரியம் வீரர்களுக்கு அபராதம் விதிப்பதை பலவீனமான செயல் என விமர்சித்த அவர், இந்திய அணியின் நிலைத்தன்மையே அவர்களின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் புகழ்ந்து தள்ளினார்.