விலங்குகளை வதைப்பவர்களுக்கும் பெரியோர்களை மதிக்காதவர்களுக்கும் நரகத்தில் காத்திருக்கும் கொடூர தண்டனைகள் இவைதான்

விலங்குகளை வதைப்பவர்களுக்கும் பெரியோர்களை மதிக்காதவர்களுக்கும் நரகத்தில் காத்திருக்கும் கொடூர தண்டனைகள் இவைதான்

இந்து மதத்தின் 18 மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணம், மனிதனின் இறப்பிற்கு பிந்தைய ஆன்மாவின் பயணம் மற்றும் அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கான பலன்களை விளக்குகிறது. விஷ்ணு பகவானுக்கும் கருடனுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமைந்துள்ள இந்த புராணத்தில், மொத்தம் 36 வகையான நரகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப, மரணத்திற்குப் பிறகு அந்த ஆன்மா எந்த நரகத்திற்குச் சென்று தண்டனை பெறும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

சுயநலத்திற்காக வாயில்லா ஜீவன்களைக் கொல்பவர்கள் ‘கும்பிபாகம்’ என்ற நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். அங்கு அந்த ஆன்மாக்கள் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுக்கப்பட்டு தீராத வேதனையை அனுபவிக்கும். அதேபோல், பெரியோர்களை மதிக்காமல் அவமதிப்பவர்கள் ‘காலசூத்திரம்’ என்ற நரகத்தில் தள்ளப்படுவார்கள். அங்கு பாவம் செய்த ஆன்மாக்கள் சுட்டெரிக்கும் நெருப்பில் மீண்டும் மீண்டும் எரிக்கப்பட்டு மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று கருட புராணம் கூறுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *