விஜய்க்கு பதிலடியா? நியாயமான விலையில் 60 கோடி வசூல் செய்து ராதிகா சரத்குமார் அதிரடி

விஜய்க்கு பதிலடியா? நியாயமான விலையில் 60 கோடி வசூல் செய்து ராதிகா சரத்குமார் அதிரடி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், டிக்கெட் விலையை நியாயமாக வைத்திருந்தும் படம் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தனது 48 கால சினிமா பயணத்தில் முதல் முறையாக லாபத்தில் பங்கு பெற்ற கதாநாயகி தாம்தான் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அதே சமயம், பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுவதை அவர் விமர்சித்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ராதிகாவின் இந்த விமர்சனம் நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்குவது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் படத்தின் வெற்றியுடன் சேர்த்து ராதிகாவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *