விஜய்க்கு தூண்டில் போடும் பாஜக தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக தவெகவுக்கு 51 தொகுதிகள் ஒதுக்கப்படுவதோடு, துணை முதல்வர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி போன்ற கவர்ச்சிகரமான ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவதைத் தவிர்க்கவே பாஜக இந்த வியூகத்தை முன்னெடுப்பதாகக் கூறப்படுகிறது.
தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த அரசியல் நெருக்கடிகளால் தவெக நிர்வாகிகள் இடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் பாதுகாப்பு கருதி கூட்டணியில் சேரலாம் என ஒரு தரப்பும், தனித்து நின்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என மற்றொரு தரப்பும் வாதிட்டுள்ளனர். இறுதியில் விஜய் எடுக்கப்போகும் அந்த முக்கிய முடிவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.