விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே லாபம் அடைய முடியும் என ஜெயக்குமார் அதிரடி
March 16, 2026

சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விஜய்க்கு முக்கிய வேண்டுகோள் விடுத்தார். விஜய் அதிமுகவின் தலைமையின் கீழ் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே வெற்றியாளராக இருக்க முடியும் என்றும் இல்லையெனில் அவர் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மேலும் ஆளுங்கட்சியின் விளம்பரங்களை அகற்றுவதில் அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கை ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் ஆணையத்தின் விதிகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு வரும் மே மாதம் உரிய பாடம் புகட்டப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.