வானில் நடனமாடும் ஈரானின் அசாத்திய ஏவுகணை மற்றும் செயலிழந்த இஸ்ரேல் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள்

வானில் நடனமாடும் ஈரானின் அசாத்திய ஏவுகணை மற்றும் செயலிழந்த இஸ்ரேல் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள்

ஈரானின் ‘செஜ்ஜில்-2’ ஏவுகணை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-4’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை, இலக்கை நோக்கிச் செல்லும்போது நடுவானில் திசைமாறும் தனித்துவமான திறனைப் பெற்றுள்ளது. இதனால் இதற்கு ‘டான்சிங் மிசைல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 17,000 கிமீ வேகத்தில் பாயும் இதைத் தடுக்க முடியாமல் இஸ்ரேலின் அயன் டோம் மற்றும் அமெரிக்காவின் பேட்ரியாட் அமைப்புகள் திணறி வருகின்றன.

சுமார் 2,000 கிமீ தூரம் வரை பாயும் இந்த ஏவுகணை 1,000 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும். இதன் ‘மேனுவரபிள் ரீ-என்ட்ரி வெஹிக்கிள்’ தொழில்நுட்பம் ரேடார்களில் இருந்து தப்பிக்க உதவுகிறது. சமீபத்தில் டெல் அவிவ் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய கிழக்கு போர்க்களத்தில் ஈரானின் மிக முக்கியமான ஆயுதமாக இந்த ஏவுகணை உருவெடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *