வானில் அரிய காட்சி 15 நாளில் இரண்டு கிரகணம்
August 23, 2025

செப்டம்பர் 2025ல் வானில் அரிய நிகழ்வு உருவாக இருக்கிறது. 15 நாட்களுக்குள் இரண்டு கிரகணங்கள் நிகழும். முதலில் செப்டம்பர் 7ம் தேதி பௌர்ணமி தினத்தில் முழு சந்திர கிரகணம் இந்தியா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் தென்படும். இது இரவு 9:57க்கு தொடங்கி, செப்டம்பர் 8 அதிகாலை 1:27க்கு முடிவடையும். இந்த நேரத்தில் உணவு மற்றும் சுப செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என நம்பிக்கை உள்ளது.
அதன் பின், செப்டம்பர் 21ம் தேதி அமாவாசையில் பகுதி சூரிய கிரகணம் நிகழும். இது இந்தியாவில் தெரியாது, ஆனால் ஜோதிட ரீதியாக முக்கியம் என கருதப்படுகிறது. கிரகணம் இரவு 11 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 22 அதிகாலை 3:24க்கு முடியும். நியூசிலாந்து, கிழக்கு மலேசியா, தெற்கு போலினேஷியா மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் இந்த வானியல் காட்சி காணப்படும்.