வாத்து வயிற்றில் லட்சக்கணக்கில் தங்கம் அதிர்ஷ்ட மழையில் நனைந்த விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி
March 12, 2026

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் விவசாயி ஒருவர் தனது வாத்தை இறைச்சிக்காக வெட்டியபோது, அதன் வயிற்றில் சிறிய தங்கத் துகள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சுமார் 10 கிராம் எடையுள்ள இந்த தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 1.65 லட்சமாகும். அந்தப் பகுதியில் உள்ள ஆற்று நீரில் தங்கப் படிவுகள் இருப்பதால், வாத்து இறையாக அவற்றை விழுங்கியிருக்கலாம் என ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திடீர் அதிர்ஷ்டத்தால் விவசாயி மகிழ்ச்சியடைந்தாலும், சீன சட்டப்படி நிலத்தடி மற்றும் இயற்கை வளங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம். அந்த ஆற்றுப் பகுதியில் தனிநபர்கள் தங்கம் எடுக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் கிடைத்த தங்கம் கைவிட்டுப் போகுமோ என்ற கவலையில் அந்த விவசாயி உள்ளார்.