வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் படுகொலை உடலை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் ஒளித்து வைத்த தம்பதி

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் படுகொலை உடலை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் ஒளித்து வைத்த தம்பதி

காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் நிலுவையில் உள்ள வாடகையைக் கேட்டதற்காக 50 வயதுடைய வீட்டு உரிமையாளரை வாடகைதாரர் தம்பதியினர் கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலையை மறைக்க உடலைத் துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் அடைத்து படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தப்பியோட முயன்ற தம்பதியினரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் உடலை மீட்டு தம்பதியினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *