வரலாற்றுச் சுற்றுப்பயணம்! ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் செல்லும் பிரதமர் மோடி

வரலாற்றுச் சுற்றுப்பயணம்! ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு டிசம்பர் 15 முதல் நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். இருதரப்பு கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். டிசம்பர் 15-16 தேதிகளில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, டிசம்பர் 16-17 தேதிகளில் எத்தியோப்பியாவுக்கும், டிசம்பர் 17-18 தேதிகளில் ஓமன் சுல்தானகத்திற்கும் பிரதமர் செல்கிறார். எத்தியோப்பியாவுக்கு இது அவரது முதல் பயணமாகும். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவல்படி, இந்த விஜயங்கள் இந்தியா மற்றும் இந்த நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் அதிகரித்து, பிராந்திய அமைதியை நிறுவ உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *