வங்கதேசத்தில் பதற்றம்: இந்திய தூதரகம் மீது தாக்குதல், விசா சேவைகள் அதிரடி நிறுத்தம்!
December 21, 2025

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு சூழல் மோசமடைந்துள்ளது. டாக்கா மற்றும் ராஜஷாஹி ஆகிய இடங்களிலும் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் இந்திய தூதரகங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC) ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. நிலைமை சீராகும் வரை இந்த மையம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஷாஹி மற்றும் குல்னாவில் உள்ள இந்திய மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.