லக்னோவில் இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து நான்கு வயது மகனை அடித்துக் கொன்ற கொடூர தந்தை

லக்னோவில் இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து நான்கு வயது மகனை அடித்துக் கொன்ற கொடூர தந்தை

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தந்தை மற்றும் மாற்றாந்தாயால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பீஷ்மா கர்பந்தா மற்றும் அவரது இரண்டாவது மனைவி ராகினி ஆகியோர் சிறுவனை பெல்ட் மற்றும் கயிற்றால் தாக்கியதோடு, குழந்தையின் உடலில் சூடு வைத்தும் கத்தியால் காயம் ஏற்படுத்தியும் சித்திரவதை செய்துள்ளனர்.

சிறுவனின் தாய் இறந்த பிறகு பீஷ்மா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தம்பதியினர் குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். சிறுவன் உயிரிழந்ததையடுத்து, அவனது பாட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மனிதாபிமானமற்ற கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *