ரோஹித் போல் ஆகிவிட்டேன்! டாஸில் சிரிப்பலைகளை ஏற்படுத்திய சூர்யகுமார்

ஆசிய கோப்பை 2025 தொடரின் ஓமனுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 4-க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டி அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டாஸின்போது, சக வீரர் ரோஹித் ஷர்மாவை நினைவு கூர்ந்து, “நான் ரோஹித் போலவே ஆகிவிட்டேன்” என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் ஆடும் லெவன் வீரர்களை அறிவிக்கும்போது, சூர்யகுமார் யாதவ் சிறிது குழப்பமடைந்தார். இந்த நிலைமை ரோஹித் ஷர்மாவுக்கு அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இதை குறிப்பிட்டே சூர்யகுமார் சிரிப்புடன் இந்த கருத்தை தெரிவித்தார். இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அர்ஷ்தீப் சிங் 100 டி20 விக்கெட்டுகளை எட்டும் வாய்ப்பில் உள்ளார்.