ராகுல் காந்தியை சந்தித்த ஜி கே எம் தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைகிறாரா

பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணியின் மகனும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பாமக இளைஞரணிப் பொறுப்பில் இருந்த தமிழ்க்குமரனின் இந்த திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் அங்கு தமிழ்க்குமரன் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக அவரது தந்தை ஜி.கே.மணி இருக்கும் நிலையில் தந்தையின் தொகுதியிலேயே மகன் களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திடீர் மாற்றங்கள் ராமதாஸ் தலைமையிலான பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.