ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளிப்பதன் பின்னணி

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளிப்பதன் பின்னணி

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்மோஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா தற்போது வலியுறுத்தி வருகிறது. முன்னதாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து எண்ணெய் வாங்கத் தடை விதித்த அமெரிக்கா, இப்போது தனது நிலப்பாட்டை மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் இந்த இரட்டை நிலப்பாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரானுடனான போர் பதற்றத்திற்குப் பிறகு, தட்டுப்பாட்டைத் தவிர்க்க அமெரிக்கா கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முன்பு மிரட்டிய அமெரிக்கா, தற்போது 30 நாட்களுக்குள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அனுமதி அளித்துள்ளது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *