ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: இனி ரிசர்வ் டிக்கெட்டிலும் புதிய ஆதார் முறை!

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: இனி ரிசர்வ் டிக்கெட்டிலும் புதிய ஆதார் முறை!

இந்திய ரயில்வே, ரயில் பயணிகளுக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அக். 1 முதல், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதார் சரிபார்ப்பு செய்த பயணிகள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இடைத்தரகர்களை கட்டுப்படுத்துவதும், உண்மையான பயணிகளுக்கு முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.

தற்போது, தட்கல் முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். ஆனால், புதிய விதியின்படி, பொதுவான முன்பதிவுகளுக்கும் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கவுண்டர்களில் டிக்கெட் வாங்குவோருக்கு இந்த விதி பொருந்தாது. இதனால், பயணிகள் எந்த இடையூறும் இன்றி டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பண்டிகை காலங்களில் இந்த நடவடிக்கை பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் என்று ரயில்வே நம்புகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *