யூட்யூப் வீடியோவை நம்பி தன்னையே ஆபரேஷன் செய்த நபர்: அதிர்ச்சி சம்பவம்

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யூட்யூப் வீடியோவை பார்த்து தன்னையே அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பாபு என்பவர் சில காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் குணமாகாததால், யூட்யூபில் வயிற்று வலிக்கான வீடியோக்களை தேடி பார்த்துள்ளார். அந்த வீடியோக்களை பார்த்த அவர், மருத்துவ நிபுணரை அணுகாமல் தானே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.
வீடியோவில் காண்பித்த வழிமுறைகளை பின்பற்றி, கத்தியால் தனது வயிற்றை கிழித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட ராஜேஷ் பாபு, பின்னர் தானே 11 தையல்களையும் போட்டுள்ளார். வலி அதிகரித்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது.
மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த தகவல்களை யூட்யூப் போன்ற தளங்களில் நம்பி செயல்படுவதை தவிர்த்து, சிறிது சந்தேகமிருந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.