மோடியை ‘அவதார புருஷர்’ என அழைத்த முகேஷ் அம்பானி, பிறந்தநாளில் கொடுத்த சர்ப்ரைஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடியை ‘அவதார புருஷர்’ என்று குறிப்பிட்டு, இந்தியாவை வழிநடத்த கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று பெருமிதமாக கூறினார். கடந்த மூன்று தசாப்தங்களாக மோடியை நன்கு அறிந்தவர் என்றும், இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் அவர் செய்யும் கடின உழைப்பை நெருக்கமாக கண்டவர் என்றும் அம்பானி தெரிவித்தார்.
பிரதமரின் 75வது பிறந்தநாளை 145 கோடி இந்தியர்களுக்கான கொண்டாட்ட நாள் என்று அம்பானி விவரித்தார். இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தின்போதும் பிரதமர் மோடி நாட்டை வழிநடத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். குஜராத்தை ஒரு பொருளாதார மையமாக மாற்றிய பிறகு, தற்போது இந்தியாவை உலகளாவிய வல்லரசாக மாற்றி வருகிறார் என்றும் கூறினார்.