மொபைல் சிக்னல் திடீரென மாயமா? 11 லட்சம் பறிபோனது; நீங்களும் ஜாக்கிரதை!

செல்போன் டவர் திடீரென வேலை செய்யவில்லையா? அதை சாதாரண தொழில்நுட்ப கோளாறு என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், இப்படி சிக்னல் இல்லாததை கவனிக்காமல் இருந்ததால், தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 லட்சம் ரூபாயை ஒரே நொடியில் இழந்துள்ளார்.
சதிவலை எப்படி பின்னப்படுகிறது?
மோசடி கும்பல் தங்களை டெலிகாம் ஊழியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு, உங்கள் இ-சிம்மை (e-SIM) அப்கிரேட் செய்வதாகக் கூறி ஆசை வார்த்தை பேசுவார்கள். அவர்களின் பேச்சை நம்பி நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவல்களை வைத்து, உங்கள் சிம் கார்டை அவர்கள் முடக்கி விடுகிறார்கள். பின்னர், உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி-யை (OTP) பயன்படுத்தி, வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை அபேஸ் செய்கின்றனர்.
தற்காத்துக் கொள்ள சில வழிகள்:
- எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் போன் மூலம் சிம் அப்கிரேட் செய்யச் சொல்லி உங்களைக் கேட்காது.
- தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகளை (Links) கிளிக் செய்ய வேண்டாம்.
- சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழையுங்கள் அல்லது ‘சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) இணையதளத்தில் புகார் அளியுங்கள்.
உங்கள் விழிப்புணர்வு மட்டுமே இதுபோன்ற பேராபத்துகளில் இருந்து உங்களைக் காக்கும்.