மூன்று கெட்டப்புகளில் சிலம்பரசன் மிரட்டும் அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரம்
March 16, 2026

மதுரையைத் தொடர்ந்து அரசன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. ரௌடி கதாபாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், நடிகர் சிலம்பரசன் இதில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இதற்காக அவர் சம்பந்தப்பட்ட கூடுதல் காட்சிகளைப் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இப்படத்திற்காகப் பிரத்யேக செட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிலம்பரசனுடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரகனி மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.