முதல்வர் பதவி ஆஃபர் கொடுத்தும் மசியாத விஜய் தனித்து போட்டியிட தவெக அதிரடி முடிவு

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக வெளியான தகவல்களை தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விஜய்க்கு துணை முதல்வர் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முதல்வர் பதவி போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அக்கட்சி நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல் குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்ப்பதால், கூட்டணி அமைத்தால் மக்களின் நம்பிக்கை போய்விடும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்து, எதிர்காலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுப்பதே விஜயின் வியூகம் எனத் தெரிகிறது. இந்த முடிவால் அதிருப்தியில் உள்ள பாஜக தலைமை, தேர்தல் நெருக்கத்தில் விஜய்க்கு அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.