மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிரடி விளக்கம்

மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிரடி விளக்கம்

மேற்காசியப் போர் பதற்றத்தால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற வதந்தி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த அச்சத்தால் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த இக்கட்டான சூழலில், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஊரடங்கு குறித்து அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், இந்தியாவின் எரிசக்தி நிலைமை பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *