மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு வேலைவாய்ப்பு பாதிப்பை ஏற்படுத்தும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
March 14, 2026

நாடு முழுவதும் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இத்தகைய கட்டாய விடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டால், நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்த தயங்கும் என்று நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு கவலை தெரிவித்துள்ளது.
இந்த விடுப்பு முறை பெண்களை ஆண்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனினும், இது குறித்து மத்திய அரசு அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து முறையான கொள்கையை வகுக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.