மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெண்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெண்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு வழங்க சட்டம் இயற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இத்தகைய சட்டம் நடைமுறைக்கு வந்தால் நிறுவனங்கள் பெண்களைப் பணியமர்த்த தயக்கம் காட்டும் என்றும் அது பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது பெண்களை ஆண்களை விடத் தாழ்ந்தவர்களாகச் சித்தரிக்கும் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து இந்த விடுப்பை வழங்கினாலும் சட்ட ரீதியாகக் கட்டாயமாக்குவது சந்தை நிலவரப்படி பெண்களின் பங்களிப்பைக் குறைக்கும் எனத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *