மலச்சிக்கல் மற்றும் கேஸ் தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலை தரும் எளிய வீட்டு வைத்தியம்
February 9, 2026

தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் இன்று 90 சதவீத நோய்கள் வயிறு சுத்தமில்லாத காரணத்தினாலேயே ஏற்படுகின்றன. நீண்ட கால மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லை செரிமான மண்டலத்தைப் பாதிப்பதோடு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் தோல் வியாதிகளுக்கும் வழிவகுக்கிறது. வயிற்றில் சேரும் கழிவுகள் நச்சுக் காற்றை உருவாக்கி, பசியின்மை மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வயிற்றை முழுமையாக சுத்தம் செய்ய ஒரு எலுமிச்சை பழச்சாறு, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் கருப்பு உப்பு ஆகியவற்றை மிதமான சுடுநீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வர வேண்டும். இந்த இயற்கை கலவை குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி மலச்சிக்கலை வேரோடு அழிக்கிறது. இது தவிர, செரிமானத்தை மேம்படுத்த சீரகம், இஞ்சி அல்லது ஓமம் கலந்த நீரை அருந்துவதும் உடனடி பலனைத் தரும்.