மனிதநேயம்! பிரேமானந்த மஹாராஜுக்கு கிட்னி தானம் செய்ய முஸ்லிம் இளைஞர் விருப்பம்; நிராகரித்த மஹாராஜ், அழைப்பு விடுத்தார்

பிருந்தாவனத்தைச் சேர்ந்த துறவி பிரேமானந்த மஹாராஜ், இட்டார்சியைச் சேர்ந்த ஆரிஃப் கான் சிஷ்டியின் சிறுநீரக தானம் செய்யும் கோரிக்கையை பணிவுடன் நிராகரித்துள்ளார். ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டு, இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ள போதிலும், ஆரிஃபின் நன்கொடையை அவர் ஏற்கவில்லை. ஆரிஃபின் இந்த உணர்வு சமூகத்தில் மத நல்லிணக்கத்திற்கும் மனிதநேயத்திற்கும் சிறந்த உதாரணமாக அமையும் என்று மஹாராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரிஃப் கான், இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமாக மஹாராஜுக்கு உதவ விரும்பி ஆகஸ்ட் 20 அன்று கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். நன்கொடையை ஏற்க மறுத்த மஹாராஜ், ஆரிஃபின் தாராள மனப்பான்மையால் மகிழ்ச்சியடைந்து, அவரை நேரில் சந்திக்க பிருந்தாவன் ஆசிரமத்திற்கு அழைத்துள்ளார். விரைவில் ஆரிஃபை அழைத்து இந்த உன்னதமான செயலுக்காக கௌரவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.