மத்திய கிழக்கில் போர் பதற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர் அதிரடி ஒத்திவைப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களால் துபாய் விமான நிலையம் சேதமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வீரர்களின் பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து இரு நாட்டு வாரியங்களும் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளன.
சார்ஜா மற்றும் துபாயில் நடைபெறவிருந்த மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடர் இந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்ற விருப்பமில்லை என்றும், நிலைமை சீரானதும் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.