மஞ்சக் கறை போச்சே! துணிகளில் உள்ள பிடிவாதமான மஞ்சள் கறைகளை நீக்கும் 5 அசத்தல் வீட்டு வைத்தியங்கள்

‘கறை நல்லது’ என்று விளம்பரங்கள் சொன்னாலும், நிஜ வாழ்க்கையில், துணிகளில் உள்ள பிடிவாதமான மஞ்சக் கறையை நீக்குவது பெரும் சவால்தான். குறிப்பாக, வெயில் காலத்தில் விரும்பப்படும் வெள்ளை மற்றும் வெளிர் நிற ஆடைகளில், சமைக்கும்போதோ அல்லது சாப்பிடும்போதோ மஞ்சள் கறை படிந்தால், அதை அகற்றுவது கடினம். எனினும், பயப்படத் தேவையில்லை. சில எளிய மற்றும் உடனடி வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த அடம் பிடிக்கும் கறைகளுக்கு நிரந்தரமாக விடை கொடுக்க முடியும்.
துப்புரவு நிபுணர்களின் கூற்றுப்படி, கறை படிந்தவுடன் துணியை சூடான நீரில் அல்லாமல் குளிர்ந்த நீரில் ஊறவைப்பது அல்லது எலுமிச்சை சாற்றைக் கொண்டு கறைபட்ட இடத்தை உடனடியாகத் தேய்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகத் துவைப்பதற்குப் பயன்படுத்தும் சோப்புடன், டூத் பேஸ்ட், வினிகர் அல்லது சோள மாவு (Corn Starch) ஆகியவற்றையும் கறை மீது தடவி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்வதன் மூலம் மஞ்சள் கறையை முழுமையாக அகற்றலாம். இந்த 5 எளிய தந்திரங்களைப் பின்பற்றி உங்கள் ஆடைகளை மீண்டும் புத்தம் புதியது போல் மாற்றலாம்.