மகளைப் பேசி மயக்கினாரா வாலிபர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு சக தொழிலாளி பயங்கரம்
March 13, 2026

கேரளாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த திண்டுக்கல் வாலிபர் முகேஷ், ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். உடன் பயணித்த தியாகராஜன் என்பவரின் மகளுடன் முகேஷ் பேசிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
முகேஷைக் காணவில்லை என தியாகராஜனே போலீசில் நாடகமாடிய நிலையில், விசாரணையில் உண்மை அம்பலமானது. சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தியாகராஜன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.