மகளிருக்கு ரூ 3000 மற்றும் 5 லட்சம் அரசு வேலைகள் பாமகவின் அதிரடி தேர்தல் அறிக்கை
March 27, 2026

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000 உரிமைத் தொகை மற்றும் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் 50,000 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி மற்றும் சமூக நீதியை மையமாகக் கொண்ட இந்த அறிக்கையில் சாதி வாரிக் கணக்கெடுப்பு மற்றும் மதுவிலக்கு போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் ஒரு தரப்பினர் இருக்கும் நிலையில், ராமதாஸ் தனித்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.