போரை முடிவுக்கு கொண்டு வரும் டிரம்ப் கருத்தை நிராகரித்து ஈரான் அதிரடி எச்சரிக்கை
March 10, 2026

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் பத்தாவது நாளை எட்டியுள்ளது. போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்திய நிலையில், அதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. போரின் எதிர்காலம் மற்றும் அதன் முடிவை தங்கள் நாட்டு ஆயுதப்படைகளே தீர்மானிக்கும் என ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழலில் ஈரானுக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. மோதலின் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை தாண்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.