பைப்லைன் கேஸ் இருந்தால் இனி சிலிண்டர் கிடையாது மத்திய அரசின் அதிரடி உத்தரவு இதோ

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வைத்துள்ள குடும்பங்களுக்கு இனி எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படாது என மத்திய அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. பைப்லைன் வசதி கொண்டவர்கள் தங்களின் பழைய சிலிண்டர் இணைப்புகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60% இறக்குமதி செய்யப்படும் சூழலில், தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பிஎன்ஜி பயனர்கள் புதிய எல்பிஜி இணைப்பிற்கு விண்ணப்பிக்க முடியாது, அப்படியே விண்ணப்பித்தாலும் அது நிராகரிக்கப்படும். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்வதை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.