பெற்ற தாய்க்கு காத்திருந்த ரத்தக் கறை படிந்த அதிர்ச்சி சகோதரியை 84 முறை குத்திக் கொன்ற பொறியாளர்
March 15, 2026

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சமூக வலைதள மோகத்தால் தனது இரட்டைச் சகோதரி ஹிமாஷிகாவை 84 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் பொறியாளர் ஹர்திக். வேலையை விட்டுவிட்டு புனே பெண்ணுடனான காதலில் மூழ்கியிருந்த ஹர்திக்கை, முதலில் பணியில் கவனம் செலுத்துமாறு தாயும் சகோதரியும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார்.
கொலைக்குப் பிறகு தனது தாயிடம் வீட்டிற்கு வந்தால் ஒரு ‘சர்ப்ரைஸ்’ காத்திருப்பதாகக் கூறி வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த தாயையும் அவர் கடுமையாகத் தாக்கியதில், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்க முடியாமல் ஒரு பொறியாளர் கொலையாளியாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.