பென்ஷன் வாங்குவோரே உஷார் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் புதிய ஆபத்து
February 23, 2026

ஓய்வூதியதாரர்களை குறிவைத்து ‘பென்ஷனர் கார்டு’ என்ற பெயரில் புதிய டிஜிட்டல் மோசடி பரவி வருகிறது. இது குறித்து பேங்க் ஆஃப் பரோடா விடுத்துள்ள எச்சரிக்கையில், வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் வரும் தேவையற்ற லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் போல் பேசி ஓடிபி மற்றும் ரகசிய எண்களை பெற்று பணத்தை திருடும் கும்பல் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களையோ அல்லது ஓடிபி எண்ணையோ தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம். எட்டாவது ஊதியக்குழு அல்லது புதிய கார்டு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், மொபைல் போன் அழைப்புகளை நம்பாமல் நேரடியாக வங்கி கிளைக்கு சென்று சரிபார்க்கவும். டிஜிட்டல் உலகில் உங்கள் கடின உழைப்பின் வருமானத்தை பாதுகாக்க எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.