பெட்ரோல் டீசல் விலை உயர்வு கட்டுப்படுமா நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அதிரடி விளக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததற்கான முக்கியக் காரணத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், அதன் சுமை பொதுமக்கள் மீது விழக்கூடாது என்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். எரிபொருள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், நுகர்வோர் விலையைக் கட்டுக்குள் வைக்கவும் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எண்ணெய் நிறுவனங்கள் தடையின்றி கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டில் விமான எரிபொருள் (ATF) தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அதன் ஏற்றுமதி மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்து, விலையேற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.