பெஞ்சமின் நெதன்யாகுவை தேடி கண்டுபிடித்து கொல்வோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை
March 15, 2026

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரோடு இருந்தால் அவரை தேடி கண்டுபிடித்து கொல்வோம் என ஈரானின் புரட்சிகர காவல்படை சூளுரைத்துள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் தேதி முதல் நெதன்யாகு மற்றும் அவரது மகன் சமூக வலைதளங்களில் தென்படாததால் அவர் மாயமானதாக வதந்திகள் பரவின. இருப்பினும் பிரதமர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தரப்பு மறுத்துள்ளது.
ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போர் வெடித்துள்ளது. ஈரான் தற்போது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இந்த கடுமையான மோதல் போக்கு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.