பெஞ்சமின் நெதன்யாகுவை தேடிப் பிடித்து கொல்வோம் என ஈரான் ராணுவம் விடுத்த அதிரடி எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருந்தால் அவரை நிச்சயம் கொல்வோம் என்று ஈரான் புரட்சிகர காவல்படை பகிரங்கமாக எச்சரித்துள்ளது. நெதன்யாகு இறந்துவிட்டதாக பரவிய வதந்திகளை இஸ்ரேல் மறுத்துள்ள நிலையில், அவரை குழந்தைகளின் கொலையாளி என ஈரான் சாடியுள்ளது. சமூக வலைதளங்களில் நெதன்யாகுவின் சமீபத்திய வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்ற சந்தேகமும் தற்போதைய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஈரானிய மண்ணில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, டெஹ்ரான் தற்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் கடும் பதிலடி கொடுத்து வருகிறது. குவைத் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.