பெங்களூரு பீனியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் பலியானதால் பெரும் பரபரப்பு

பெங்களூரு பீனியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் பலியானதால் பெரும் பரபரப்பு

பெங்களூரு அருகே உள்ள பீனியாவில் திருமணத்தை தாண்டிய உறவு காரணமாக ஏற்பட்ட மோதலில் அக்கா மற்றும் தம்பி என இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மல்லேஷ் கவுடா மற்றும் சாயா இடையிலான உறவு குறித்து ஏற்பட்ட தகராறில், மல்லேஷின் மனைவி யமுனா மற்றும் அவரது சகோதரர் சுதீப் குமார் ஆகியோர் சாயாவின் வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த சாயாவின் 16 வயது மகன் பிரதீப் குமார், கத்தியால் யமுனா மற்றும் சுதீப் குமாரை சரமாரியாக குத்தியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பீனியா போலீசார், சிறுவன் பிரதீப் மற்றும் அவரது தாய் சாயாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *