பெங்களூரு உணவகத்தில் லெமன் ஜூஸிற்கு கேஸ் தட்டுப்பாடு கட்டணமா பரவும் ரசீதால் சர்ச்சை

பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் இரண்டு லெமன் ஜூஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு, ‘கேஸ் தட்டுப்பாடு கட்டணம்’ எனக்கூறி ১৭ ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரசீது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜூஸ் தயாரிக்க கேஸ் தேவையில்லாத நிலையில், இந்த கூடுதல் கட்டணம் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் அந்த உணவகத்திற்கு கூகுள் மேப்ஸில் மிகக்குறைந்த ரேட்டிங் அளித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த உணவக உரிமையாளர் அவினாஷ், இது கணினி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்று தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தானாகவே பில்லில் இந்த கூடுதல் கட்டணம் இணைக்கப்பட்டாலும், அதற்கு இணையான தொகையைத் தள்ளுபடியாகக் குறைத்து வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்ததாக அவர் கூறினார். தற்போது இந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.