புதுச்சேரி டூ கொல்லம் ரயில் சேவை தொடங்கப்படுமா சுற்றுலா பயணிகள் பெரும் எதிர்பார்ப்பு
February 23, 2026

புதுச்சேரியிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் தென்காசி வழியாக கொல்லத்திற்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றாலம் மற்றும் பாலருவி போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் நேரடி வசதி இல்லாததால், தற்போது பயணிகள் பல்வேறு ரயில்கள் மாறி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இந்த வழித்தடத்தில் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டால் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி இடையிலான ஆன்மீகச் சுற்றுலா மேம்படும். இது தெற்கு ரயில்வேக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தருவதுடன், சீசன் காலங்களில் ரயில்களில் நிலவும் கடும் கூட்ட நெரிசலைக் குறைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.