பிறந்தநாள் கொண்டாடிய மகள்! காதலனை கடத்தி கொடூரத் தாக்குதல் நடத்திய தந்தை கைது

பிறந்தநாள் கொண்டாடிய மகள்! காதலனை கடத்தி கொடூரத் தாக்குதல் நடத்திய தந்தை கைது

மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில், தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவரது நண்பர்கள் மற்றும் காதலனைத் தாக்கிய ஒரு தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர வனப்பகுதியில் மகளும் நண்பர்களும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியதை அறிந்த தந்தை, தனது சகாக்களுடன் அங்கு சென்று முதலில் மகளின் நண்பர்களைத் தாக்கினார்.

அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத தந்தை, மூன்று நாட்களுக்குப் பிறகு மகளின் காதலனை கடத்திச் சென்று காரில் வைத்து சுமார் நான்கு மணி நேரம் கொடூரமாகத் தாக்கினார். படுகாயமடைந்த நிலையில் இளைஞனை சாலையோரம் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட இளைஞன் அளித்த புகாரின் பேரில், தந்தை மற்றும் அவரது மூன்று கூட்டாளிகள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *