பிரிவுக்குப் பிறகு டேட்டிங் அழைப்பு, டிரம்ப் மீது பிரிட்டிஷ் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

1998-ல் தனது விவாகரத்திற்குப் பிறகு, அப்போதைய அமெரிக்க தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்கு டேட்டிங் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லொக்கார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆஸ்கார் விருது பெற்ற நடிகை இந்த பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். டிரம்ப் தன்னை ‘ஸ்டாக்’ செய்ததாகவும், விவாகரத்து பற்றிய செய்தி கிடைத்தவுடன் இந்த அழைப்பை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
டிரம்ப் தனக்கு தொலைபேசியில் அழைத்து, தனது வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்ததாகவும், ஆனால் தான் அதை நிராகரித்ததாகவும் எம்மா தெரிவித்தார். டிரம்ப்புடன் டேட்டிங் சென்றிருந்தால், அமெரிக்க வரலாற்றை மாற்றியிருக்கலாம் என்றும், தனக்கு ஒரு நல்ல கதை கிடைத்திருக்கும் என்றும் எம்மா நகைச்சுவையாகக் கூறினார். 1998-ல் டிரம்ப் தனது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸை விவாகரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.