பாஜகவுடன் ரகசிய கூட்டணி? 45 தொகுதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு விஜய் சம்மதம்

திமுக கூட்டணியை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 15 ஆம் தேதி டெல்லி செல்லும் விஜய், அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் நடந்த ரகசியப் பேச்சுவார்த்தையில் தவெக-வுக்கு 45 தொகுதிகள் மற்றும் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் அமைதி காத்த விஜய், சில தனிப்பட்ட நெருக்கடிகளுக்குப் பிறகு இந்த டீலுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது. கொள்கை ரீதியாக முரண்பட்டாலும், திமுக என்ற பொது எதிரியை ஒழிக்க இது வெறும் தேர்தல் காலக் கூட்டணி மட்டுமே என விஜய் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.