பாக்கெட்டில் இருந்த ஒரு சின்ன பொருள் வாஷிங் மெஷினில் வெடிப்பு – வீடியோ வைரல்
September 18, 2025

ஸ்பெயினில் ஒரு சலவைக் கடையில் இருந்த வாஷிங் மெஷினில் எதிர்பாராத விதமாக பயங்கரமான வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பு நடந்த சில நொடிகளுக்கு முன்பு ஒருவர் மெஷினை விட்டு வெளியேறும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தி நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, சிகரெட் லைட்டர் ஒன்று துணியின் பாக்கெட்டில் இருந்ததாலேயே இந்த விபத்து நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த சம்பவம், வாஷிங் மெஷினில் துணிகளைப் போடுவதற்கு முன் பாக்கெட்டுகளைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.