பழைய ஆடியோவை சிதைத்து அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி சட்ட நடவடிக்கை
March 13, 2026

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணத்திற்கு பிறகு, ராஷ்மிகாவின் பழைய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. அவரது கடந்த கால உறவு மற்றும் முன்னாள் நிச்சயதார்த்தம் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில், அந்த ஆடியோ திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த ராஷ்மிகா, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தனிப்பட்ட தாக்குதல்களை இனி பொறுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், கணவர் விஜயுடன் நேரத்தை செலவிட திட்டமிட்டிருந்த நிலையில், இந்த தேவையற்ற சர்ச்சையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளார்.