பயங்கரவாதியின் இறுதி சடங்கில் லஷ்கர் தளபதிக்கு எதிர்ப்பு

காஷ்மீரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹபீப் தஹிரின் இறுதிச் சடங்கில், லஷ்கர்-இ-தைபாவின் தளபதி ரிஸ்வான் ஹனிஃப் கிராம மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். கடந்த வாரம், பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளை ராணுவம் அழித்தது, அவர்களில் ஹபீப் தஹிரும் ஒருவன். ஹனிஃப் மற்றும் அவரது கூட்டாளிகள் இறுதிச் சடங்கிற்குச் சென்றபோது, கிராம மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
கிராம மக்களின் எதிர்ப்பால், லஷ்கர் தளபதி பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு அம்பலமான பிறகு, சர்வதேச அரங்கில் இஸ்லாமாபாத்தின் நற்பெயர் கெட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.