பந்துவீச்சில் சொதப்பிய மருமகன் ஷஹீன் அப்ரிதி; மருமகனை திட்டிய சூர்ச சாகப்தம் ஷாகித் அப்ரிதி

இந்தியாவுடனான போட்டி முடிந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஹீன் ஷா அப்ரிதி, 16 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் பலரும் இவரின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர். ஆனால் இவரின் மாமனாரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான சாகித் அப்ரிதி மருமகனின் ஆட்டத்தை பார்த்து மகிழவில்லை, மாறாக வெளிப்படையாக விமர்சித்துள்ளார். மாமனார் அப்ரிதியின் கருத்துப்படி, மருமகனின் பேட்டிங்கில் ரன்கள் சேர்ப்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. மாறாக பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவார் என அவர் கூறியுள்ளார்.
சாகித் அப்ரிதி, ஒரு கிரிக்கெட் நிகழ்ச்சியில் பேசும் பொழுது, ‘ஷஹீனின் பேட்டிங்கில் இருந்து ரன்களை நான் எதிர்பார்க்கவில்லை. பந்துவீச்சில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பினேன். புதிய பந்தில் எப்படி சுவிங் செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக இது மிகவும் முக்கியமான ஒன்று’ என்றார். அந்தப் போட்டியில் ஷஹீன், 2 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்துள்ளார். இந்த 2 ஓவர்களில் அபிஷேக் ஷர்மா இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி இருந்தார்.