பத்திரிகையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட் ஓய்வூதியத்தை அதிரடியாக உயர்த்தினார் முதல்வர் ஸ்டாலின்
March 13, 2026

தமிழகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஓய்வூதியத்தை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இனி ஓய்வூதியம் 15,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 7,500 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மட்டுமின்றி அங்கீகாரம் பெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு மற்றும் வீட்டுவசதி வாரியம் மூலம் வீட்டுமனைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தொடங்கி பணிகளை விரைவுபடுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.