நேபாளத்தில் அதிரடி திருப்பம் பதவியேற்ற 24 மணி நேரத்தில் முன்னாள் பிரதமர் ஒலி கைது
March 28, 2026

நேபாளத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற ஒரே நாளில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெக்ஹக் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஜென் ஜி’ போராட்டத்தின் போது நடந்த ஊழல் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனேயே எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைதை அரசியல் பழிவாங்கல் என்று ஒலி விமர்சித்துள்ள நிலையில், இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் தொடக்கம் என்று தற்போதைய உள்துறை அமைச்சர் சுதன் குருங் கூறியுள்ளார்.